2/22/11

சின்னச்சின்ன கருத்துக்கள்...








இருளில் இருந்த விழிகளுக்கு,வெளிச்சம் சொன்னது-


" உனக்கு நான் தேவைப்படாத வரை,


நானாக உன்னைத்தேடி வரமாட்டேன் " என்று..


_________________________________________________________






வார்த்தைகள் ஏற்ப்படுத்துகின்ற காயங்களை ,


மௌனம் என்னும் மருந்தால்,


ஒருபோதும் குணப்படுத்த முடியாது ...


_________________________________________________________






(உறவில் நீடிக்க ...!)


மனிதர்கள் சொல்லும் வார்த்தைகள் பிடித்திருந்தால்,


வார்த்தைகளை நேசி ...!


மனிதர்கள் சொல்லும் வார்த்தைகள் பிடிக்காதிருந்தால்,


மனிதர்களை நேசி ...!


அப்போது தான் பிடித்த மனிதர்கள்


பிடித்தவர்களாகவே நீடிப்பார்கள் ...!


_________________________________________________________




அவள் இல்லா வாழ்க்கை ,வலி அன்றி, வேறொன்று இல்லை ...












அவள் நினைவுகளை புதைத்து வைத்ததுனால்


தானோ என்னவோ ,


என் இதயத்திலும் மயான அமைதி...


_____________________________________________________________




அவள் ஆசையாய் ஆரம்பித்து,


நான் கற்றுதேர்ந்தமையால்,


வலிகளுக்கும் பழகிக்கொண்டேன்..


வாழ்க்கைப்பயணத்தில்,


வலிகள் வலிக்காதபோது,


வழியில் வந்தவர்கள் வசை பாடினார்கள்..


"வாழ்க்கை வலிக்காமல் இருக்க,கற்றுக்கொண்டிருக்கிறாய் என்று "


யார் அறியக்கூடும்?


அவள் இல்லாமல்,எனக்குள் இருக்கும் வலியை!!!


______________________________________________________________






எனக்கு பிடித்தவை எல்லாம்


என்னை விட்டு விலகிச்செல்லும் போதும்,


உயிர் மட்டும் விலகாமல் இருக்கிறது..!


அதனால் தானோ, என்னவோ


எனக்கும்


உயிரின் மீது ஆசையே இல்லை..


______________________________________________________________

கடந்து வந்த காதல் வசந்தம் ...









இரக்கமற்றவள் நினைவால் ,


உறக்கம் இழந்த


இரவின் வலியை ,


எனது சிவந்த கண்கள் ,


விடியலில் கண்ணீருடன் சொன்னது ,


இது காதல் தான் "என்று !!!..

____________________________________________________________


எனக்கு சற்றும் பிடிக்காதவைகளை செய்து ,


என் கோபத்தீயில் எரிந்து


அவள் சாம்பலாகும் போதும்,


எனக்கே தெரியாமல்,


என்னுள் வளர்ந்தது "காதல்"


______________________________________________________














உயிரின் ஆத்திச்சூடி..



ன்பில் 
ர்ப்பரித்து 
ன்பம் பெருக்கெடுத்து, நான் 
சல் போலேயலைகிறேன்....
யிரில் 
டுருவி 
ன்னயே 
ங்கவைத்தாய்!....
விரல் தீண்டியும் ,
ரு ஜென்மம் வாழ்ந்துமே ,
ய்ந்தேபோவேன், என் 
ஒளவையே!...

காதல்......., என்னையே களவாடியது !!!








_____________________________________________________________


பூவோடு வாசம் போல,


தேனோடு சுவை போல ,


விண்ணோடு நிலவு போல ,


மண்ணோடு மழை போல ,


நீ வேண்டும்...என்னுடனே


நீ வேண்டும்...


நீ வேண்டும் ...எப்போதும்


நீ வேண்டும் ...


விழியருகே .. விழியருகே விலகாமல் ,நீ வேண்டும் ..


கரம்கோர்த்து ..கரம்கோர்த்து , நீங்காமல் ,நீ வேண்டும் ...


நினைவோடு ..நினைவோடு ,அகலாமல் , நீ வேண்டும் ...


வழிநெடுகே ..வழிநெடுகே , பிரியாமல் , நீ வேண்டும் ...


நீ வேண்டும் ... என்னுடனே நீ வேண்டும் ...


பயணத்திலே..பயணத்திலே ,பாதையாக , நீ வேண்டும் ...


வீசும்போது ..வீசும்போது ,தென்றலாக ,நீ வேண்டும் ...


வெளிச்சத்திலே ..வெளிச்சத்திலே ,நிழலாக ,நீ வேண்டும் ...


இருளோடு.. இருளோடு , ஒளியாக ,நீ வேண்டும் ...


கவிதையிலே..கவிதையிலே ,கற்பனையாக , நீ வேண்டும் ...


பேசும்போது..பேசும்போது ,வார்த்தையாக ,நீ வேண்டும் ...


தூக்கத்திலே.. தூக்கத்திலே ,கனவாக ,நீ வேண்டும் ...


என்னுடனே நீ வேண்டும் ...


என்றென்றுமே நீ வேண்டும் ...


தோளுடனே.. தோளுடனே , சாய்ந்துகொண்டே ,நீ வேண்டும் ...


உயிராக , உயிராக , துடித்துக்கொண்டே , நீ வேண்டும் ...


நீ வேண்டும் ...நீ வேண்டும் ...நீ ..... வேண்டும் .....


__________________________________________________________





உன்னை தேடித்தேடி அலைந்தேனே ..


என் தேகம் வெகுவாய் மெலிந்தேனே ..


தீயில் தினமும் எரிந்தேனே ..


அணுஅணுவாய் உன்னையே ரசித்தேனே...


என் இமைகள்தனை விரியச்செய்தாய் ..


விழிகள் உன்னை காணச்செய்தாய் ..


இதயம்தனை ஏங்கச்செய்தாய் நியாயம்தானா...


சுயநினைவை நீ மறக்கச்செய்தாய் ..


கால்கள் உன்னை தொடரச்செய்தாய் ..


ஆருயிரும் உருகச் செய்தாய் நியாயம்தானா ...


பூக்கள் , அவை பிடிக்கும் என்றாய் ..


என் ......


இதயம் அது வேண்டும் என்றாய் .


சிகையில் அதை சூடி கொண்டாய் நியாயம்தானா .,


_________________________________________________________




பசுமையான நினைவுகள்


(கல்லூரி காலங்களை, 
வசந்தம் வீச வைத்த அத்துணை 
நண்பர்களுக்கும், அவர்தம் நட்புக்கும் சமர்ப்பணம் ) 
----------------------------------------------------------------------------
கல்லூரிக் காலங்களில்
நண்பர்களோடு கழிந்த 
பிறந்தநாள் கொண்டாட்டங்களில் 
வாழ்த்துக் கூறி,
முகமெங்கும் கேக் பூசி ,
முகம் கழுவ 
என் கால்களை 
வாஷ்பசின் நோக்கி 
செலுத்தும் போது ,
எனக்கு எரிச்சல் மட்டும்  
தான் மிஞ்சும்!..

ஆனால்..!
இந்நாட்களில்,
என் பொழுது விடிந்து ,
நானும் மஞ்சத்தை நீங்கி எழுந்து,
முகம் கழுவ 
வாஷ்பசின் நோக்கி நடந்து,அடைந்து,
இரு கை நீரை அள்ளி 
முகத்தில் அறைந்த வேளையில் ,
முகம் கழுவி 
வடிந்த நீர் 
என் நண்பர்களின் குரலில் கேட்கிறது,
"மச்சான் நல்லா இருக்கியா?? " 
என்று..!!!
நீர் வடிந்த பின் நானும்..! 
கண்களில் நீர் சுரக்கிரேன்,
பசுமையான நினைவுகளை 
நெஞ்சில் சுமந்து கொண்டு ...!!!

பிறகு..  
எனக்கும் நினைவுக்கு வருகிறது 
என்றோ ஒரு நாள் 
தூக்கம் இன்றி,
இரவில் நான் கிறுக்கிய ஹைக்கூ ஒன்று..

"நட்பின் நினைவுகளை சுமக்கும் போது,
 இதயமும் கருவறை தான்...
ஆணும் தாய் தான்... "
------------------------------------------------------------------------------------