10/20/10

கவிதைகள் உனக்காக!!!

கடற்கரையோரம் கைகோர்த்து நெடுந்தூரம் நடக்கையில்,

கடலலைகளில் நடந்து வந்த கால்தடங்கள் அடித்துசென்றபோதும்

ஈரம் குறையவில்லை,

அவள் விரல்களை

இறுக பிடித்த

என் உள்ளங்கையில்...

______________________________________

கவிதைகள் எழுதுவதில்

அவளுக்கு விருப்பம் இல்லாதபோதும்

நான் ரசிக்க அவள் எழுதிய கவிதையில்

பிழைகள் பல தென்பட்டபோதும்,

எனக்கு அதில் தெரிந்ததெல்லாம்,

அவளின்,

அளவில் அடங்கா காதல் மட்டும் தான்!!!!

______________________________________

9/7/10

இத்தனைக்கும் வரம் வேண்டும்?

வரம் வேண்டும்

உன்

எழுதுகோலாய் நான் இருக்க...

விரல்களுடனாவது

வாழ்ந்து கொள்கிறேன்

நீ

தூக்கி எறியும் வரை..

----------------------------------------------------------

வரம் வேண்டும்

உன்

காதணியாக நான் இருக்க...

துளைகளில்

தொங்கிக் கொண்டிருக்கும்

என்னை,

காணவில்லை என்றால்,

அப்போதாவது ,

நீ

என்னை தேடுவாய் என்பதற்காக...

----------------------------------------------------------

வரம் வேண்டும்

விழி செல்லும் வழி எங்கும்

உன் உருவம்...

மறந்தும் உன்னை

நான் நினைக்க

மறக்ககூடாது என்பதற்காக ...

----------------------------------------------------------

வரம் வேண்டும்

உன் விழியருகே

என் உயிர் நீங்கி செல்ல..

அப்போதாவது உணர்ந்துகொள்

உன்னிடம் கொண்ட

என் உயிரின் காதலை...

----------------------------------------------------------

9/6/10

கடல் காற்றில் கலந்த பருவக் காதல்

இளஞ்சிவப்பு ஆடை உடுத்தி

நீலத்தேவனும் மஞ்சத்திற்கு

விடை கொடுத்தே ..

என்னவளின் வரவிற்காக

என்னுடனே காத்திருக்கிறான்...

மேற்கு திசையில் மறு ஆதவன் உதிக்க

வியப்புடனே என் விழிகளும்

திரும்பிய கணத்தில் வெள்ளை மிளிர் உடையில்

காற்றில் ஆடிய தாவணியும் முகமறைக்க,

மாசிடம் விடுபட்ட வெண்மதி போல்

ஒளிர்ந்தது பால் முகம்

அழகு மலர் ஆடியே என்னை நோக்கி நடந்தது...

அடைந்தது ...அமர்ந்தது ... என்னருகில்...

காத்திருந்த கணம் யாவும் வரம் என்றே

எண்ணத்தில் நான் லயித்திருக்க,

தன் தாமதத்திற்கு வருந்தினாள்..

அதனை விரும்பாத போதும் உள்மனம் நேசித்தது...

அவளின் வருத்தத்தை வழி அனுப்பி ஆறுதல் அளித்து

அவளழகில் நான் ஆழ்ந்திருந்த நேரம்

இறையருள் பெற்ற பக்தன் போல்,

மயங்கியே காதல் பக்தியில் வீற்றிருந்தேன்..

நான் தீண்டும் முன்

அவள் தலைமுடி, உதடுகளை

காற்றின் வேகத்தில் உரசிப்பார்க்க

கோபம் கொண்ட அவள், கையும்,

முன்பு ஒரு நாள் கொடுத்த முத்தத்திற்கு

நன்றியாக தடுத்தே நிறுத்தியது ...

கிராமத்து தேவதை

-----------------------------------------------------------

குல தெய்வ கோயில் திருவிழாவில்,

கிராமத்து வீதிகளில் நாட்டுப்புறப்பாட்டு

ஒலிப்பெருக்கியில் ஓலம் இடுகையிலும்,

அவளின் ஒற்றை வரி கொலுசோசை,

என் செவிகளை துளைக்கதான் செய்கிறது....

-----------------------------------------------------------

கவிதைகள் உனக்காக!!!

---------------------------------------------------------

அவளை நீங்கி நெடுந்தூரம்

சென்றபோதும்,

அவளின் வெண்கல குரல் என்

காது துவாரங்களை

துளைத்துக் கொண்டே இருக்கிறது...

என் இதயத்தில் எழுந்து !!

---------------------------------------------------------

நினைக்கத் தெரிந்த மனம்

மறக்கத்தான் துடிக்கிறது..

உன்னை மறக்க முடியாமல்

துடிக்கத்தான் மறந்தது.

---------------------------------------------------------

உன்னை நீங்கியே என் உடல்

பயணித்தபோதும்...

உதடுகளோ, உன் பெயருடனே உறவாடியது...

---------------------------------------------------------

ஆயிரமாயிரம் பரிசுகளை

அவளுக்காக என் கைகள்

ஏந்தியபோதும்...

பிரியும் வேளையில்

அவள் கால்களை தழுவிய கண்ணீரே,

என் விலை மதிப்பில்லா

காதல் பரிசு !!!

---------------------------------------------------------

மின்னல் ஒளி விழியாள்

என் வழியில்,

என்னை கடந்து நடக்கையில்

நொடியில்

இதயம் விழுந்தது,

அவள் காலடியில் !!!

---------------------------------------------------------

கடிதங்கள்

எல்லாம்

மலையேறிவிட்ட காலத்திலும்

உனக்காக,

நான் காகிதமும்,எழுதுகோளுமாய்

வீற்றிருப்பேன்

நீ

என்னை

விரும்பாதபோதும் !!!

---------------------------------------------------------

செந்தமிழில் சின்னதாய்

உனது பெயர்,

இனிக்கத்தான் செய்கிறது

என் "தமிழை" விட....

---------------------------------------------------------

அழகே உன் சிரிப்பில் ,என் இதயம்

நின்று தான் போனது...

போனதும் கிடைத்தது மீண்டும் உன் பார்வையில்,

பார்வையில் ஆயிரம் பேர் தென்பட்டாலும்

எனக்கு நீ தான் ஆயிரம் விழிகளிலும் தெரிகிறாய்...

தெரியாமல் உன் மீது பூத்த மலர் காதல்,

காதல் படுத்தும் பாடு தான், நீ காதில்

பூ சூட்டிய போதும் சிரித்தே ஏற்று கொண்டது என் இருதயம்.

--------------------------------------------------------

மழைத் தூறலில் உன் முகம் கழுவும்போது

தவறியது என் கால்கள் !!!

தென்றல் வீசுகையில் உன் சிகை கோதும்போது

படபடக்கிறது என் விழிகள் !!!

நிலவொளியில் நீ சிரிக்கும்போது

துடிதுடிக்கிறது என் இதயம் !!!

---------------------------------------------------------

நீ என்னுடன் இருக்கும்போது

மரணத்தை கூட அரவணைத்துகொள்வேன் !!

நீ என்னுடன் இல்லாதபோது

நிழலைக் கூட வெறுத்து ஒதுக்குவேன்!!

வந்து சேர்ந்து விடு என்னோடு!!

இல்லையேல்,

என் உடல் சேர்ந்துவிடும் மண்ணோடு......

---------------------------------------------------------

---------------------------------------------------------