இளஞ்சிவப்பு ஆடை உடுத்தி
நீலத்தேவனும் மஞ்சத்திற்கு
விடை கொடுத்தே ..
என்னவளின் வரவிற்காக
என்னுடனே காத்திருக்கிறான்...
மேற்கு திசையில் மறு ஆதவன் உதிக்க
வியப்புடனே என் விழிகளும்
திரும்பிய கணத்தில் வெள்ளை மிளிர் உடையில்
காற்றில் ஆடிய தாவணியும் முகமறைக்க,
மாசிடம் விடுபட்ட வெண்மதி போல்
ஒளிர்ந்தது பால் முகம்
அழகு மலர் ஆடியே என்னை நோக்கி நடந்தது...
அடைந்தது ...அமர்ந்தது ... என்னருகில்...
காத்திருந்த கணம் யாவும் வரம் என்றே
எண்ணத்தில் நான் லயித்திருக்க,
தன் தாமதத்திற்கு வருந்தினாள்..
அதனை விரும்பாத போதும் உள்மனம் நேசித்தது...
அவளின் வருத்தத்தை வழி அனுப்பி ஆறுதல் அளித்து
அவளழகில் நான் ஆழ்ந்திருந்த நேரம்
இறையருள் பெற்ற பக்தன் போல்,
மயங்கியே காதல் பக்தியில் வீற்றிருந்தேன்..
நான் தீண்டும் முன்
அவள் தலைமுடி, உதடுகளை
காற்றின் வேகத்தில் உரசிப்பார்க்க
கோபம் கொண்ட அவள், கையும்,
முன்பு ஒரு நாள் கொடுத்த முத்தத்திற்கு
நன்றியாக தடுத்தே நிறுத்தியது ...
No comments:
Post a Comment